எதிர்வரும் 8 வருடங்களுக்கான அரசின் திட்டங்கள் குறித்து எதிர்வரும் 4ஆம் திகதி அறிவிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமைத்துவத்தின் கீழ் இந்த திட்டம் முன்வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகளின் எண்ணிக்கை 7 பில்லியன் டொலர் என்றும், இதன் எண்ணிக்கையானது இந்த வருடத்தின் நிறைவில் 7.5 தொடக்கம் 8 பில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதிய தேசிய வருமான சட்டமூலமானது நாளைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்