முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்டவுக்கு எதிரான பௌத்த சில் மத அனுட்டானங்களுக்கான ஆடை வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் 7 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் இலங்கை தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவிற்கு சொந்தமான 600 மில்லியன் ரூபா பௌத்த சில் மத அனுட்டானங்களுக்கான ஆடை பகிர்ந்தளிப்புக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் குறித்த இரண்டு பேருக்கும் எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார்.
இன்றைய தினம் இரண்டு தரப்பினரும் எழுத்து மூல விளக்கங்களை தாக்கல் செய்தாக தெரிவிக்கப்படுகிறது