இந்தியர்கள் சிலர் இலங்கைக்கு வருகைத் தந்து சிறுநீரக வர்த்தகத்தில் ஈடுபட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஹைதராபாத் காவற்துறையினர் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் 58 இந்தியர்களுக்கு வர்த்தக ரீதியாக சிறுநீரகத்தொகுதி அறுவைச் சிகிச்சைகளைப் புரிந்திருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக இந்தியாவின் பல இடங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் ஏமாற்றி அழைக்கப்பட்டு, அவர்களின் சிறுநீரகம் சட்டவிரோதமாக அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த வைத்தியரை விசாரணை செய்வதற்கான நடவடிக்கை இன்னும் இடம்பெறுவதாக ஹைதராபாத் மத்திய குற்றவியல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.