தென்னாப்பிரிக்க கிரிக்கட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான தலைவர் பதவியில் இருந்து ஏ.பி.டி.வில்லியர்ஸ் விலகியுள்ளார்.
ஆனால் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் விளையாட விருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் பின்னர் அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கவில்லை.
காயம் காரணமாக விளையாடாதிருந்த அவர் கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் சர்வதேச கிரிக்க் போட்டிகளில் விளையாடிவருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக தென்னாப்பிரிக்க அணியை வழிநடத்தியமையையிட்டு பெருமை அடைவதாகவும், தற்போது வேறொருவருக்கு அந்த பொறுப்பை வழங்கி பின்வாங்குவதே சிறந்தது என்று தீர்மானித்துள்ளதாகவும் வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
எனினும் தாம் இனி டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20க்கு20 ஆகிய மூவகை கிரிக்கட் போட்டிகளிலும் பங்கேற்க தயாராக இருப்பதாக, தென்னாபிரிக்க கிரிக்கட் நிறுவனத்துக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.