தமது தண்டனையை ரத்து செய்யக் கோரி, தமிழக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சர்ச்சைக்குரிய செயலாளர் சசிகலா நடராஜன் இந்திய உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட அவர் உள்ளிட்ட நான்கு பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவர்கள் பெங்களுர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் குறித்த தீர்ப்பில் குறையிருப்பதாக தெரிவித்து, அதனை மீளாய்வு செய்யுமாறு சசிக்கலா நடராஜன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதியரசர்கள் குழு, குறித்த தீர்ப்பில் எந்த குறையும் இல்லை என்று தெரிவித்து, அந்த மனுவை ரத்து செய்துள்ளது.
அதேநேரம், தாங்கள் இன்னும் சசிக்கலாவின் கட்டளைகளின் அடிப்படையிலேயே செயற்படுவதாக, தமிழ்நாட்டின் 19 சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.
டி.டி.வீ. தினகரனுடன் இணைந்து, குறித்த 19 பேர் ஆளுனரை சந்தித்து, தமிழக முதல்வருக்கு எதிரான மனுவை கையளித்துள்ளனர்.
இதனை அடுத்து தமிழக முதல்வர் தமது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்கட்சியால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தாங்கள் சசிக்கலாவின் தூண்டுதலுடனேயே செயற்படுவதாக குறித்த 19 பேரும் அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.