தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கத்திற்கு எந்தத் தேவையும் கிடையாது – பைசர் முஸ்தபா

247 0

உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கத்திற்கு எந்த ஒரு தேவையும் கிடையாது என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை சமர்பித்து இன்று பாராளுமன்றில் உரையாற்றுகையிலே அமைச்சர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தில் ஒரு அமைச்சரின் தேவைக்கு அமையவே எல்லை நிர்ணயம் இடம்பெற்றது எனவும் அதன் மூலம் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் நியாயம் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

Leave a comment