தன்னை அவமதித்ததாகக் குற்றம் சாட்டி பாராளுமன்ற அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவிற்கு எதிராக பிரதி சபாநாயகரும் கிரிக்கெட் சபை தலைவருமான திலங்க சுமதிபால மூலம் நுகேகொட மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கு மிகநீண்ட விசாரணைக்கு பின்னர் முடிவுக்கு வந்துள்ளது.
இதேவேளை, குறித்த வழக்கில் திலங்க சுமதிபால தோல்வியடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2003ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி அர்ஜுன ரணதுங்கவின் வீட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் தன்னை அவமதித்தார் எனக்கூறி 2005ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதி திலங்க சுமதிபால வினால் வழக்குதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு தாக்கலில் தன்னை அவமதித்ததற்காக 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.