புதிதாக நியமனம் பெறும் பட்டதாரி ஆசிரியர்கள் வீடுகளை அண்மித்த பாடசாலைகளில் மாத்திரமே கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுப்படாது பின்தங்கிய பாடசாலைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
அதற்கான அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம் கோரியுள்ளது.
இதன் மூலம் யுத்தத்தினாலும் மற்றும் இயற்கை அழிவுகளினாலும் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணக் கல்வியை மீண்டும் வளர்ச்சி நிலைக்குக் கொண்டு வரமுடியும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கல்வியை மறுமலர்ச்சிக்குக் கொண்டு செல்லும் நோக்கில் இன, மத பேதமின்றி அனைத்து ஆசிரியர்களும் சேவையாற்ற வேண்டும் எனவும் அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர், சிவக்கொழுந்து ஜெயராஜா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதியுடன் கிழக்கு மாகாண ஆசிரியர் வெற்றிடம் முடிவுக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.