காணாமல்போனோர் அலுவலகம் இன அடிப்படையில்

371 0

v007காணாமல் போனோர் தொடர்பாக அமைக்கப்படவுள்ள அலுவலகம் தொடர்பான குழுவில் இன அடிப்படையில் ஏழு பேரைக் கொண்ட குழு ஒன்றை அரசியல் அமைப்புப் பேரவை பரிந்துரைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவலை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்;த நிலையில், அலுவலகத்தை அமைப்பதற்கான பணிகள் எதிர்வரும் வாரங்களில் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அலுவலக செயற்பாட்டிற்கான உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கவுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டமூலம் சபாநாயகரினால்   ஒப்பமிட்டதன் பின்னரேயே அது சட்டமாகும்.
இதன்பின்னர் குறித்த அலுவலகம், இந்த வருடத்துக்குள் தமது பணிகளை ஆரம்பிக்கும் அதேவேளை, நியமிக்கப்படும் உறுப்பினரின் பதவிக்காலம் மூன்று வருடங்களை கொண்டிருக்கும் எனவும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்