இலங்கை சீனாவிடமும் இந்தியாவிடமும் முதலீட்டுக் கோரிக்கை

296 0

agreementsஇலங்கை அரசாங்கம், அமெரிக்கா மற்றும் சீனாவிடம் இருந்து மேலும் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாராம் தொடர்பான ராஜாங்க பிரதி செயலாளர் எச் ரிவ்கின்னை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க  சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் அமெரிக்க முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்காக அழைப்பதற்கான சூழ்நிலை இன்னும் உருவாகவில்லை என ரிவ்கின் குறிப்பிட்டதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சீனா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு முதலீட்டாளர்களை சந்திக்கும் பல நிகழ்ச்சி திட்டங்களை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.