சிரியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கு கடும் சண்டை நடந்து வருகிற தவுமா நகரில் இரட்டைக்குழந்தைகள் நெஞ்சுப்பகுதிகள் ஒட்டிய நிலையில் பிறந்துள்ளன.
சிரியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கு கடும் சண்டை நடந்து வருகிற தவுமா நகரில் ஒரு பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு இரட்டைக்குழந்தைகள் நெஞ்சுப்பகுதிகள் ஒட்டிய நிலையில் பிறந்துள்ளன. அந்தக் குழந்தைகளுக்கு நவ்ராஸ் மற்றும் மோவஸ் என பெயரிடப்பட்டுள்ளது. அந்த குழந்தைகளும், அவற்றின் தாயும் ஆம்புலன்சு மூலமாக டமாஸ்கஸ் அருகே அமைந்துள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டனர்.
அந்தக் குழந்தைகளை உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, பிரித்தெடுக்காவிட்டால் இறந்து விடும் என கூறப்படுவதால், இதற்கு உதவுமாறு உலக சுகாதார நிறுவனத்தின் உதவியை சிரியா டாக்டர்கள் கோரி உள்ளனர்.
இதற்கிடையே அந்தக் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்காக பிரார்த்திப்பதாக ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் பலரும் செய்திகள் விடுத்துள்ளனர்.