உரிமையாளர்கள் அல்லாத, அல்லது உரிமை கோரப்படாத பணம், காணி என்பவை அரசுடமையாக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
உரிமையாளர்கள் அற்ற காணிகள் மற்றும் உரிமை கோரப்படாது வங்கிகளில் வைப்புச்செய்யப்பட்ட பணம் உள்ளிட்ட சொத்துக்களை அரசுடமையாக்கும் சட்டம் விரைவில் நடைமுறைக்குக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்று அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நிதிமோசடி விசாரணைப் பிரிவினர் அண்மைக் காலங்களில் நடாத்திய விசாரணைகளில் பல காணிகள் பணங்கள் உரிமைகோரப்படாத நிலையில் காணப்பட்டதை இனங்கண்டுள்ளனர்.
இதனையடுத்தே, உரிமைகோரப்படாத காணிகள், பணம் போன்றவற்றை அரசுடமையாக்கும் சட்டமூலத்தைக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.