சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் நடைபெறவுள்ள அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு மற்றும் ஐநா பொதுச் சபைக் கூட்டம் ஆகியவற்றில் பங்குபற்றுவதுடன் அங்கு உரையாற்றவுமுள்ளார்.
அணிசேரா நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாடு அடுத்த மாதம் 17ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் வெனிசுலா நாட்டில் கராகஸ் நாட்டில் நடைபெறவுள்ளது. இதில் சிறிலங்கா அதிபர் உரையாற்றவுள்ளார்.
அத்துடன், ஐநாவின் 71ஆவது பொதுச்சபைக் கூட்டம் அடுத்த மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்காக நியூயோர்க் செல்லவுள்ளார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பதபாவி விலகுவதாலும், இந்த ஆண்டு இறுதியில் ஐநாவின் பொதுச் செயலர் பான் கி மூன் பதவி விலகுவதாலும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐநாவின் கூட்டத்தொடர் முக்கியம் வாய்ந்தது எனக் கருதப்படுகின்றது.