க.பொ.த. உயர் தரப் பரீட்சையின் இரசாயன விஞ்ஞானம் முன்கூட்டியே வௌியானமை !

353 7

இம்முறை க.பொ.த. உயர் தரப் பரீட்சையின் இரசாயன விஞ்ஞானம் பகுதி 2 இற்கான வினாப்பத்திரத்தில் வந்திருந்த சில வினாக்கள் மேலதிக வகுப்பு நடத்தும் ஆசிரியர் ஒருவரினால் வழங்கப்பட்ட ​கையேட்டில் உள்ளடக்கப்பட்டிருந்தமை சம்பந்தமான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

குறித்த சம்பவம் தொடர்பாக விஷேட விசாரணை ஒன்றை ஆரம்பிக்குமாறு பொலிஙாரிடம் எழுத்து மூலம் கேரிக்கை விடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார கூறினார்.

நேற்று இடம்பெற்ற க.பொ.த. உயர் தரப் பரீட்சையின் இரசாயன விஞ்ஞானம் பகுதி 2 இற்கான வினாப் பத்திரத்தில் வந்திருந்த சில வினாக்கள் தொடர்பில் ஏற்கனவே தனது மேலதிக வகுப்பில் கலந்துரையாடப்பட்டதாக கூறி, மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவரினால் நேற்றைய தினம் கம்பஹா பிரதேசத்தில் உள்ள பரீட்சை மண்டபம் ஒன்றிற்கு அருகில் துண்டுப்பிரசும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இது சட்டவிரோதமான செயல் என்றும் இது தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளின் பின்னர் இது தொடர்பாக கருத்து வௌியிடுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார கூறினார்.

Leave a comment