முன்னாள் போராளிகள் அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டம்!

489 7

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

தமக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரி மூன்று முன்னாள் போராளிகள் இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்குகளை துரிதப்படுத்துமாறு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரத்தில் சுமார் 20 முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஏனைய போராளிகளும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment