தற்போதைய அரசியல் கலாச்சாரமானது எதிர்கால இலங்கைக்கு நல்லதல்ல என புத்தசாசன மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய அரசியலுக்கு பொருத்தமான நபர்களை அடையாளம் காண்பது அரசியல் கட்சித் தலைவர்களின் கடமை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அமைச்சர் விஜயதாச இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பிரதேசங்களில் இருக்கும் போதை வர்த்தகர்கள்,சண்டியர்கள்,பாதாள தலைவர்களுக்கு வாக்களித்து அவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய மக்களே பலனை அனுபவிப்பதாகவும், இவ்வாறான நபர்களை தவிர்க்க வேண்டியது கட்சித் தலைவர்களின் பாரிய பொறுப்பு என்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.