மஹிந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் குழாம் ஒன்றை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தினால் சட்டமா அதிபரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதற்கு அமைய, சட்டமா அதிபர் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப்பிடம் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய விரைவில் இதற்கான நீதிமன்ற குழாம் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த காலத்தில் இடம்பெற்ற சட்டவிரோத செயற்பாடுகள் சாதாரண நீதிமன்ற கட்டமைப்பின் கீழ் விசாரிக்கும்போது தாமதம் ஏற்படுகின்றமையால் விசேட நீதிமன்ற கட்டமைப்பின் கீழ் அதன் செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.