அமைச்சுப் பதவியை துறப்பதற்கு தமக்கு எந்த காரணமும் இல்லையென நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டியில் மல்வத்து பீட மகாநாயக்கர்களை சந்திக்க சென்றிருந்தபோது அமைச்சர் இதனை தெரவித்துள்ளார்.
இலங்கையில் சுகாதாரத்துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதனை அதன் அமைச்சர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்தநிலையில் அவர்கள் நீதித்துறையில் தலையீடு செய்ய முயற்சிக்கின்றனர்.
நீதித் துறையின் மூலம் அனைத்து மக்களுக்கும் நியாயமான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அனைத்து மக்களும் தமது உரிமைகள் தொடர்பில் குரல் எழுப்புவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், புத்தசாசனத்தை பாதுகாப்பதற்கு குரல் எழுப்புகின்றபோதும் ஹம்பந்தோட்டை மத்தள திருகோணமலை துறைமுகம் என்பவற்றை பாதுகாக்க வேண்டும் என்று கூறுகின்றபோதும் இராணுவத்தினர் சர்வதேசத்தின் முன்னிலையில் குற்றவாளிகளாக நிறுத்தப்படக் கூடாது என்று கூறுகின்றபோதும், விஜேதாச ராஜபக்ஷ என்பவர் அடிப்படைவாதியாக அடையாளப்படுத்தப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேசத்தின் அடிமைகளாக உள்ள சிலரே இத்தகைய பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.