சுயமரியாதை இருக்குமானால் நீதியமைச்சர் பதவி விலகட்டும் – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

289 0

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிற்கு சுயமரியாதை இருக்குமானால் அமைச்சுப் பதவியில் இருந்து வெளியேற வேண்டும் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அண்மையில் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், அவர் அந்த பதவியில் இருந்து விலகியிருந்தார்.

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மீது ஏற்பட்டுள்ள நம்பிக்கையற்ற காரணத்தினால், ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள அவ்வளவாக விவாதங்களில் ஈடுபடாத உறுப்பினர்கள் பலர் அவர் நீதி அமைச்சு பதவியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

எனவே, நீதி அமைச்சர் அந்த பதவியில் இருந்து வெளியேறுவதே சிறந்ததென அமைச்சர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment