கர்நாடக அரசு புதிய அணை கட்ட தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது: முதல்வர் பழனிசாமி

266 0

கர்நாடக அரசு அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திருவாரூர் வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவது பற்றி பல்வேறு கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது.

இந்த தருணத்தில் தமிழகத்துக்கு நீர் வழங்குவதற்கு வசதியாக ஒரு அணையை கட்டி நிர்வகிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடலாமா? என நீதிபதி தீபக் மிஸ்ரா, மத்திய அரசு தலைமை வக்கீலிடம் இதற்கான நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதற்கு தமிழக அரசு வக்கீல் இதுகுறித்து தனியே வாதிடப்படும் என தெரிவித்தார்.

இந்த நிலையில் கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்ட எந்த எதிர்ப்பும் இல்லை என்று தமிழக அரசின் வக்கீல் கூறியுள்ளதாக வந்த செய்தி உண்மைக்கு புறம்பானது. புதிய அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் போது தமிழக அரசின் உரிமைகள் பாதிக்காமல் வலுவான வாதங்கள் வைக்கப்படும்.

தமிழக விவசாயிகள் நலனுக்கு எதிராக, கர்நாடக அரசு புதிய அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment