இலங்கை தொடர்பில் பூட்டான் அச்சம்

277 0

இலங்கையில் மருத்துவ கற்கையில் ஈடுபட்டுள்ள பூட்டானைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரையும், விரைவாக நாடு திரும்புமாறு அந்த நாட்டின் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதற்கான கோரிக்கை அந்த நாட்டின் உயர் கல்வித் திணைக்களம் விடுத்துள்ளதாக, அந்த நாட்டின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இலங்கையில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இதனால் மருத்துவக் கற்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே பூட்டான் அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இலங்கையின் அரசியல் சூழ்நிலைள் குறித்து பூட்டான் அரசாங்கம் பதற்றத்துடன் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment