புதிய அரசில் அமைப்பு தொடர்பில் அடுத்த வாரம் அறிக்கப்படும் – அமைச்சர் நிமல்

265 0

புதிய அரசில் அமைப்பு தொடர்பிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டை எதிர்வரும் வாரத்தில் வெளியிட முடியும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் இதனை தெரவித்தார்.

புதிய தேர்தல் முறை தொடர்பான சட்ட மூலம் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

இந்த தேர்தல் முறையை புறந்தள்ளுவதற்கு ஐக்கிய தேசிய கட்சியினர் முயற்சித்தனர்.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முயற்சியால் தொகுதிவாரி தேர்தல் முறை கொண்டுவரப்படுகின்றது.

எனவே, எதிர்வரும் வாரத்தில் புதிய தேர்தல் முறை குறித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதன்போது குறிப்பிட்டார்

Leave a comment