இந்தியாவின் தெற்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான கட்டளைத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஹெரிஷ் நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
இலங்கை இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்கவின் அழைப்பொன்றின் பேரில் அவர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது இரு தரப்புக்களுக்கும் இடையிலான இராணுவ கூட்டு பயிற்சி குறித்து கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய இராணுவத்தினரை பயிற்சி முகாம்களில் பங்குகொள்வதற்கு இலங்கை அனுப்பிவைக்க விரும்புவதாக இந்திய தென்பிராந்திய கட்டளை தளபதி இராணுவ தளபதியுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.