இந்தியாவின் உத்தரபிரதேஷ் மாநிலத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 23 பேர் பலியாகினர்.
தொடருந்து தடம்புரண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவின் பூரி பிரதேசத்தில் இருந்து ஹரித்வார் பிரதேசத்திற்கு பயணித்துக்கொண்டிருந்த தொடருந்தே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய அரச தலைவர்கள் தமது இரங்கலை தெரிவித்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மூன்றரை லட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.