பீகாரில் 1¼ கோடி பேர் வெள்ளத்தில் சிக்கி பரிதவிப்பு – பலி எண்ணிக்கை 202 ஆக உயர்வு

272 0

பீகாரில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 202 ஆக உயர்ந்துள்ளது.

பீகார் மாநிலத்தின் வட பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கிஷன்கஞ்ச், சமஸ்திபூர், தர்பங்கா உள்பட 18 மாவட்டங்கள் மழை, வெள்ளத்தால் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

இதனால் சுமார் 1¼ கோடிக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தில் சிக்கி பரிதவித்து வருகின்றனர். இவர்களுக்கு நிவாரண பொருட்கள் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் போடப்பட்டு வருகிறது.

மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக பல்வேறு படைகளைச் சேர்ந்த 2,200-க்கும் மேற்பட்டோர் 300 படகுகளுடன் சென்று தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 6¼ லட்சம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், மாநிலத்தில் பலத்த மழை மற்றும் வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை நேற்று 202 ஆக உயர்ந்தது.

Leave a comment