ராஜபக்சர்களை வேட்டையாடும் தேவை இல்லை – தலதா அதுகோரல

283 0

தற்போதைய அரசாங்கத்திற்கு ராஜபக்சர்களை வேட்டையாடும் தேவை இல்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் விசாரணை நடத்திவருகின்றன.

இந்த நிலையில் கடந்த காலங்களில் மோசடிகளிலோ குற்றச் செயல்களிலோ ஈடுபட்டிருந்தால் ராஜபக்சர்களும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுவார்கள் என அமைச்சர் இதன்போது தொடர்ந்தும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment