ஒரே இடத்தில் 23,615 பேர் பல் துலக்கி சென்னையில் புதிய சாதனை

285 0

பற்களை முறையாக பராமரிக்காவிட்டால் அவை நாளடைவில் வலுவிழந்து உதிர்ந்து விடுவதுடன் பற்சொத்தை, பற்குழி மற்றும் பற்களை பலமாக பற்றிநிற்கும் ஈறுகளின் வீக்கத்துக்கும் காரணமாகி நம்மை படாதபாடு படுத்தி விடும். 

பற்களை முறையாக தேய்த்து பரமாரிக்க வேண்டிய அவசியம் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த பிரபல பற்பசை தயாரிப்பு நிறுவனமான கோல்கேட் பால்மோலிவ் (இந்தியா) திட்டமிட்டது.

அனைத்திந்திய பல் மருத்துவர்கள் சங்கம், சென்னை ரோட்டரி சங்கம், பல் மருத்துவ அறிவியல் கழகம், ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம் ஆகியவையும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் ஒன்றிணைந்தன.

இதையடுத்து, சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று ஒரே நேரத்தில் பள்ளி மாணவர்கள், பெரியவர்கள் என 23,615 பேர் ஒன்றுகூடி, பல் துலக்கினர். கோல்கேட் பற்பசை மற்றும் பிரஷ்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி ஆசிய அளவில் புதிய சாதனை படைத்துள்ளதாக கோல்கேட் பால்மோலிவ் நிறுவனத்தின் மண்டல மேலாண்மை இயக்குநர் இஸாம் பச்சாலானி தெரிவித்துள்ளார்.

Leave a comment