கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சைவச்சிறுவர் இல்லத்தின் தலைவர் தி.இராசநாயகம், கௌரவிக்கப்பட்டார்(காணொளி)

502 0

முன்னாள் அரச அதிபரும், ஓய்வு பெற்ற பொது நிர்வாக உள்ளுராட்சி அமைச்சின் செயலாளரும், கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சைவச்சிறுவர் இல்லத்தின் தலைவருமான திருநாவுக்கரசு இராசநாகம், யாழ் விருது பெற்றமைக்காக இன்று கௌரவிக்கப்பட்டார்.
கௌரவிப்பு நிகழ்வு மகாதேவா சுவாமிகள் சைவச்சிறுவர் இல்ல வளாகத்தில், முன்னாள் உதவி அரசாங்க அதிபர் பொன் நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்றது.

விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன், வட மாகாண மகளீர் விகாரம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் அனந்தி சசிதரன், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன், பிரதேச செயலாளர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் விழா நாயகன் திருநாவுக்கரசு இராசநாகம் பொண்ணாடை போத்திக் கௌரவிக்கப்பட்டார்.

Leave a comment