இந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத்தளபதி இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் (காணொளி)

562 0

இந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத் தளபதி பி.எம்.ஹரிஸ் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்த இராணுவத்தளபதி விசேட விமானத்தின் மூலம், பலாலி விமான நிலையத்தை வந்தடைந்தார்.

யாழ்ப்பாணத்தில் 1987 முதல் 89 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், இந்திய இராணுவ ஆட்சியில் உயிர் நீத்த, இந்திய இராணுவ வீர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்ப்பாணம் வருகை தந்தார்.

பலாலியில் அமைக்கப்பட்டுள்ள இந்திய இராணுவத்தின் நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்திய, இந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத்தளபதி, கோப்பாய் பகுதியிலும் அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியையும் சந்தித்து கலந்துரையாடினார்.

Leave a comment