சாவகச்சேரி டிறிபேக் கல்லூரிக்கு முன்பாக இன்று காலை துவிச்சக்கர வண்டியும் டிப்பர் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மட்டுவில் பகுதியை சேர்ந்த 56 வயதான கதிர்காமு சிவராசா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர், தேங்காய் வியாபாரம் மேற்கொள்பவர் எனவும் மட்டுவிலில் இருந்து கிளிநொச்சி நோக்கி துவிச்சக்கர வண்டியில் தேங்காய் கட்டிக்கொண்டு பயணித்தவேளை குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டிப்பர் வகன சாரதியை கைதுசெய்த சாவகச்சேரி பொலிஸார் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.