வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து நீர்கொழும்பு நோக்கி கொண்டு செல்ல முற்பட்ட 2 கிலோகிராம் கேரள கஞ்சா பொதியினை வைத்திருந்த சந்தேக நபரை நேற்று இரவு வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் 2 கிலோகிராம் கஞ்சாவினை 1,50,000 ரூபாவிற்கு கொள்வனவு செய்து நீர்கொழும்பிற்கு கொண்டு சென்று 3,00,000 ரூபாவிற்கு விற்பனை செய்வதாக சந்தேகநபர் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.