சீனா மேற்கொண்டு வரும் அத்துமீறிய வர்த்தக நடைமுறை தொடர்பான உயர்மட்ட விசாரணைகளை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது.
அமெரிக்காவின் காப்புரிமை, அறிவுசார் சொத்துரிமை சட்டத்தை மீறியவகையில் சீனா மேற்கொண்டு வரும் வர்த்தக நடைமுறைகள் தொடர்பாகவே குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச வர்த்தக சட்டங்களை மீறிய வகையிலும் சீனாவின் வர்த்தகம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அண்மையில் அமெரிக்க வர்த்தகத்துறை செயலாளருக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
அறிவுசார் சொத்துரிமைகளை பிறநாடுகள் சட்டவிரோதமாக பயன்படுத்துவதால், அமெரிக்காவில் வருடம் ஒன்றுக்கு பல லட்சம் மக்கள் வேலை வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்படுகிறது.
அத்துடன் பல்லாயிரம் கோடி டொலர்கள் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
எனவே, இது போன்ற சீனாவின் வர்த்தகம் தொடர்பான விசாரணைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க அரசாங்கம் சார்ந்த நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்திவருவதாகவும் அமெரிக்க வர்த்தகத்துறை செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.