நாமலை கைது செய்ய முடியும் – நீதிமன்றம்

1817 0

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு (FCID) பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷவுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து அழைப்பு விடுக்குமாறு நீதிமன்றத்திடம் நேற்று (18) FCID கோரிக்கை
விடுத்திருந்தது.

அந்த கோரிக்கை தொடர்பில் விசாரணை செய்த போதே கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலன்ஸூரிய இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பொலிஸ் அதிகாரியை அச்சுறுத்தியமை தொடர்பில் குறித்த அதிகாரி பொலிஸ்மா அதிபரிடமும் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்தியாவின் கிரிஸ் நிறுவனத்தின் 70 மில்லியன் ரூபாவை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment