வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிலர் செயற்பட்டுவருவதாக இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கு மக்கள் தீவிரவாதத்தை நிராகரித்துள்ளனர்.
வடக்கு மக்களுக்கும் தெற்கில் உள்ளவர்களுக்கும் இடையில் நம்பிக்கையை ஏற்படுத்த இராணுவம் முயற்சித்துவருகின்றது.
அரசாங்கம் தூர நோக்குடன் நாட்டில் நற்புறவு மிக்க சூழலை ஏற்படுத்த முயற்சிக்கின்றது.
எனினும் சிலர் இரு தரப்பினரிடத்திலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியை தடுக்கும் வகையில் செயற்பட்டுவருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினர் மக்கள் அபிமானம் பெற்றவர்களாவர்.
அநீதிக் காரர்கள் யுத்த இராணுவத்தினராக இருக்க முடியாது.
எனவே, இராணுவத்தில் எவரேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பினர் அவர்கள் நிச்சயமாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.