உண்மையை பேசுகின்ற காரணத்தினால் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றை கொண்டு வர ஐக்கிய தேசிய கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மாத்தறை – கம்புருபிடிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன இதனை குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் விசாரணை செய்ய விசேட நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என சிலர் கூறுகின்றனர்.
திருட்டு சம்பவங்களுடன் தொடர்பு பட்டு நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்தவர்களும் நீதி விசாரணைகள் இடம்பெற வேண்டும் என கோருவது விந்தைக்குரிய விடயம் என ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.