அரசாங்க பணிகளை மேற்கொள்பவர்கள் மக்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்ற தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.
விக்டேரியா மற்றும் கொத்மலை விவசாயிகளுக்கு மாற்று இடத்திற்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் கண்டியில் இடம்பெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அரசியல் வாதிகள், அரச அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனத்தினர் மற்றும் பொது மக்கள் ஆகிய அனைவரும் தமது தாய் நாடு, தமது பொறுப்பு என்ற அடிப்படையில் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.