அரசாங்கத்தை கவிழ்க்க எவரும் இருக்கப்போவதில்லை – அமைச்சர் ராஜித்த

356 0

ஒன்றிணைந்த எதிர் கட்சியின் ஊழல் மற்றும் மோசடியுடன் தொடர்புடைய சிலர் சட்டத்தின் முன் நிறுத்தப்படும் போது எதிர்காலத்தில் அரசாங்கத்தை கவிழ்க்க எவரும் இருக்கப்போவதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்தின இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்கட்சியில் சிலர் குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் காவற்துறை நிதி மோசடி விசாரணை பிரிவு ஆகியவற்றிலேயே முன்னிலையாகின்றனர்.

அவர்கள் காலத்தை வீன்விரயம் செய்யும் நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் அவர்கள் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கின்றனர்.

அவர்கள் சட்டத்தின் முன்கொடுவரப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தை கவிழ்க்கும் எண்ணம் கொண்டவர்கள் இருக்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்முள்ளது.

Leave a comment