ஒத்திவைக்கப்பட்டுள்ள கூட்டத்தில் தம்மால் பங்கேற்க முடியாது-டெனிஸ்வரன்

39783 0

வவுனியாவில் தற்போது நடைப்பெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டெலோவின் மத்திய குழு கூட்டம் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இதனை உறுதிப்படுத்தினார்.

இதேவேளை, நாளைய தினம் நடைப்பெறவுள்ள கூட்டத்தில் கட்சியால் முக்கிய தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

இந்தநிலையில் நாளைய தினத்திற்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ள கூட்டத்திலும் தம்மால் பங்கேற்க முடியாது எனவும் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன் அடுத்தவாரமளவில் குறித்த கூட்டம் நடத்தப்படுமாயில் அதில் தம்மால் கலந்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.