அரசாங்கத்திற்கு ராஜபக்ஷக்களை வேட்டையாடும் தேவை இல்லை – அமைச்சர் தலதா

329 0

தற்போதைய அரசாங்கத்திற்கு ராஜபக்ஷக்களை வேட்டையாடும் தேவை இல்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை தெரவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் விசாரணை நடத்திவருகின்றன.

இந்த நிலையில் கடந்த காலங்களில் மோசடிகளிலோ குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் ராஜபக்ஷக்களும் சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாகுவார்கள் என அமைச்சர் தலதா அதுகோரல குறிப்பிட்டார்.

Leave a comment