கிளிநொச்சியில் நிதி நிறுவன ஊழியர்கள் மக்களுடன் அநாகரீகமாக நடப்பதாக தொடர்சியாக குற்றச்சாட்டு

376 0
நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் ஊழியர்கள் தாங்கள் வழங்கும் கடன்களை  அறவிடும் போது மக்களிடம் அநாகரீகமாக நடந்துகொள்வதாக பொது மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றனா்.
அண்மையில் ஊற்றுப்புலம் கிராமத்திற்கு சென்ற  கிளிநொச்சியில் உள்ள நிதி  நிறுவனம் ஒன்றின்  கடன் அறவிடும் ஊழியர் ஒருவா்   அன்றை மாதாந்த கடன் தவணைப் பணத்தை மீளச் செலுத்த தவறிய ஒருவரை  பணத்தை கட்ட தகுதியில்லை என்றால் பிச்சை எடுத்து கட்டுமாறு உரத்த குரலில் தெரிவித்துள்ளாா்.
இது மாத்திரமன்றி பல கிராமங்களில்  அலுவலக நேரங்கள் தவிர்ந்த நேரங்களில் செல்லும் நிதி நிறுவன ஊழியர்கள் மக்களிடம்  சண்டியர்கள் போல் நடந்துகொள்வதாகவும், வீட்டுப் பாவணைப் பொருட்களை தூக்கிச் செல்லப் போவதாவும் பொது மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனா்.
அதிக வட்டி கடும் நிபந்தனைகள் கொண்ட இந் நுண் கடன்   வழங்கும்  திட்டத்தில் கடன் வழங்கும் போது மக்களிடம்  அவற்றைப் பற்றி விளக்கமாக தெரிவிப்பது கிடையாது. அத்தோடு மக்களின் வறுமை அவா்களின் பணத் தேவையை பயன்படுத்தி  இலகுவாக கிராமங்களுக்குச் சென்று நிதி நிறுவனங்கள் கடனை வழங்கி வருகின்றாா்கள்.
25 ஆயிரம் முதல் கடன் வழங்க்கப்படுகிறது.30  ஆயிரம்   கடனுக்கு விண்ணப்பித்த ஒருவருக்கு சேவை கட்டணம் இரண்டாயிரம் கழித்த பின்னர் 28 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதனை 2300 வீதம் 18 மாதங்களுக்கு செலுத்த வேண்டும்.   நிறைவில் 28 ஆயிரம் பெற்றவா் 41400 ரூபா செலுத்தியிருப்பாா். இதனை தவிர ஒவ்வொரு மாதமும் குறித்த திகதியில் கடனை மீளச் செலுத்த வேண்டும் தவறும் போதும் குற்றப் பணமாக 500 ரூபா.மேலும் குழு முறையிலேயே கடன் வழங்கப்படுகிறது.
மூன்று பேர் அல்லது ஜந்து பேர் கொண்ட குழு  என்றால்  கடனை மீளச் செலுத்தும் போது குழுவில் உள்ள அனைவரும் சென்றே கடன் தவணைப் பணத்தை  மீளச் செலுத்தவேண்டும்.ஒருவா்  தவறினாலும் கடன் தவணைப்பணம் நிதி நிறுவன ஊழியரால் பெற்றுக்கொள்ளப்படாது. இதன்போதே ஊழியர்கள் மக்களுடன் மிக மோசமாக நடந்துகொள்கின்றாா்கள்.
அத்தோடு குழு முறையில் கடன்  பெற்றவா்கள்  அனைவரும் ஒன்றாக சென்றால் மாத்திரமே கடன்  தவணைப் பணம் வசுலிக்கபபடும் ஒருவா்  தாமதித்தால் ஏனையவா்கள் குழுவில் உள்ள அவா் வரும்வரை காத்திருக்க  வேண்டும்.
இதனால் ஊருக்குள் மக்கள் மத்தியில் வாய்த்தர்க்கம் அடிதடி என  பிரச்சினைகள் ஏற்பட்டு பொலீஸ், மத்தியஸ்தர் சபை என பிரச்சினைகள் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு நிதி நிறுவனங்களின் நுண்கடன் திட்டத்தினால்  பொது மக்கள்  பெரிதும் பாதிக்கபடும் விடயம் பல இடங்களிலும் சுட்டிக்காட்டப்பட்டும் மாவட்டத்தில் அவா்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எதுவும் இது வரை எடுக்கப்படவில்லை

Leave a comment