அ.தி.மு.க.வில் பிளவு இல்லை என பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் இன்று காலை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆரம்பமானது.
அதில் கலத்து கொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அ.தி.மு.க.வில் பிளவு என்பது இல்லை. ஒரு கட்சியில் 2ல் ஒரு பங்கு எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து சென்றால் தான் பிளவு ஆகும்.
நாங்கள் அப்படி அல்ல. எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம். அதனை பேசி தீர்த்து கொள்வோம்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் இதனை நாங்கள் உறுதி மொழியாக ஏற்கிறோம். எங்களுக்குள் எந்த பிளவும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.