மோட்டார் சைக்கிள்களுக்கு அரசாங்கம் வழங்கிய வரி குறைப்பு இந்தியாவில் தயாரிக்கப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கு வழங்கப்பட மாட்டாது எனவும் அந்த வரி குறைப்பு ஜப்பானில் தயாரிக்கப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜப்பான் மோட்டார் சைக்கிள்களின் விலை அதிகம் என்பதால் மீண்டும் ஜப்பான் மோட்டார் சைக்கிள் சந்தையை உருவாக்குவதே இந்த வரி குறைப்பின் நோக்கமாகும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
150 CC ஐ விட குறைந்த இயந்திர கொள்ளளவு கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு அரவிடப்பட்டு வந்த 90% வரி நீக்கப்பட்டதாக கடந்த வியாழக்கிழமை நிதி அமைச்சர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.