இந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத் தளபதி பி.எம்.ஹரிஸ் இன்று காலை 11-30 மணியளவில் விசேட விமானத்தின் மூலம் பலாலி விமான நிலையத்தை வந்தடையவுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் 1987 – 89ஆம் ஆண்டு இந்திய இராணுவ ஆட்சியல் உயிர்நீத்த இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத் தளபதி யாழ்ப்பாணம் வருகைதருகின்றார்.
யாழ் வரும் அவர் பலாலியில் அமைக்கப்பட்டுள்ள இந்திய இராணுவத்தின் நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் கோப்பாய், கொக்குவில், கோட்டை ஆகிய இடங்களிலும் உயிர்நீத்த இந்திய இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார். தொடர்ந்து யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது