பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடான டோங்காவில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் வீடுகளில் இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
இது குறித்து அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறுகையில், இந்த நிலநடுக்கம் சுமார் 6.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
பசிபிக் கடலில் இருந்து 500 கி.மீட்டர் தொலைவில் இது உருவானது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.