மலேஷிய நீதவான நீதிமன்றத்தில் இலங்கையை சேர்ந்த ஒருவருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெண்ணொருவரின் கணவருக்கு அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் குறித்த பெண்ணை கவரும் வகையில் தீய வழியில் முயற்சித்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே அரச தரப்பினர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இலங்கையை சேர்ந்த அவர் கடந்த 12 ஆம் திகதி இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டார் என தெரிவித்துள்ள அரச சட்டவாதி, சந்தேகத்துக்குரியவருக்கு பிணை வழங்கப்பட கூடாது என வேண்டுகோள் விடுத்தார்.
அவரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் பிணை கோரிக்கையை நிராகரித்து, மேலதிக விசாரணைகளை நாளைய தினத்திற்கு ஒத்திவைத்தது.