மாகாண சபைகள் சட்டமூலம் 24ம் திகதி பாராளுமன்றத்திற்கு-லக்‌ஷமன்

300 0

அனைத்து சிவில் அமைப்புக்கள், மகளிர் சங்கங்கள் போன்றவற்றை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பெற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக்களுக்கு அமைவாக திருத்தங்களுடனான புதிய மாகாண சபைகள் சட்டமூலம் வரும் 24ம் திகதி பாராளுமன்றத்திற்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் லக்‌ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இந்த சட்டமூலம் தாக்கல் செய்யப்படும் என்று அவர் கூறினார்.

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் பொது உடன்பாட்டின் படி இது தாக்கல் செய்யப்பட உள்ளமை விஷேட அம்சமாகும் என்று அமைச்சர் லக்‌ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.

Leave a comment