பிரபாகரனிடம் தமது செல்வாக்கை செலுத்தமுடியவில்லை – சொல்ஹெய்ம் கவலை

343 0

தமிழர்கள் மத்தியில் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பெரும் அளவுக்கடந்த மதிப்பு வைத்திருந்தமைக்கான காரணத்தை தம்மால் கண்டறியமுடியவில்லை என்று இலங்கையின் விடயத்தில் முன்னர் ஏற்பாட்டாளராக செயற்பட்ட எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்

தமிழர்களை பொறுத்தவரை அவர்கள் பிரபாகரனை கடவுளாக, உருவாக்குநராக, காப்பாற்றுபவராக நினைத்தனர்.

இந்தநிலையில் பிரபாகரனிடம் தமது செல்வாக்கை செலுத்துவதற்கு தம்மால் அதிக நேரத்தை அவருடன் செலவிடமுடியவில்லை என்றும் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார். இது தமக்கு வருத்தத்தை தருவதாகவும் அவர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்

ஏனைய வெளிநாட்டவர்களை காட்டிலும் தாம் அவரை சந்தித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள சொல்ஹெய்ம், முஸ்லிம் பிரதிநிதிகளை ஒருமுறை சந்தித்துள்ளார்

சில சிங்களவர்களையும் அவர் சந்தித்துள்ளார்

இந்தநிலையில் அவருடன் அதிக நேரம் செலவழிக்க கிடைத்திருந்தால், அவருடன் தனிப்பட்ட உறவை கட்டியெழுப்பியிருக்கலாம்
அவருக்கு திரைப்படங்கள் பார்ப்பது பிடிக்கும். உணவு சமைப்பது பிடிக்கும் இயற்கையை பிடிக்கும்.

எனினும் அவற்றை பற்றி பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. வரையறுக்கப்பட்ட நேரங்களே அவரை சந்திப்பதற்கு கிடைத்தன என்று சொல்ஹெயம் கூறியுள்ளார்

இறுதிப்போரின் போது வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கருத்துரைத்துள்ள சொல்ஹெய்ம், விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் புலிதேவன் நோர்வேயின் பிரதிநிதியிடம், தாம் சரணடைய விரும்புவதாக தெரிவித்திருந்தார்
எனினும் போர் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்தமையால், தாம் தலையிட்டு உதவும் நிலை தவறவிட்டதாக நோர்வேயின் பிரதிநிதி அவர்களுக்கு அறிவித்தார்.

ஏற்கனவே பல சந்தர்ப்பங்கள் இருந்தபோதும் அவை தவறவிடப்பட்டதை புலித்தேவனுக்கு கூறப்பட்டது

எனினும் படையினரிடம் சரணடையவேண்டுமெனில் வெள்ளைக்கொடிகளை ஏந்தி சரணடையமுடியும் என்று நோர்வே தரப்பு கூறியது

தமது தரப்பில் இருந்து சரணடைவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு அறியப்படுத்தப்படும் என்றும் நோர்வே தரப்பினால் புலித்தேவனுக்கு கூறப்பட்டது

இந்த தகவல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரரும் ஆலோசகருமான பெசில் ராஜபக்சவுக்கு நோர்வே தரப்பினரால் கூறப்பட்டது

விடுதலைப்புலிகளால் நோர்வேக்கு மாத்திரமல்ல சில முக்கிய தமிழர்கள் ஊடாகவும் அரசாங்கத்துக்கு சரணடையும் விடயம் தெரிவிக்கப்பட்டது

எனினும் பின்னர் நடேசன், புலித்தேவன் ஆகியோர் கொல்லப்பட்டு விட்டதாக தமக்கு தகவல் கிடைத்ததாக சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்

இந்தநிலையில் சரணடைந்தவர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள் என்ற விடயம் இன்னும் தெரியவரவில்லை.

எவ்வாறு பிரபாகரன் மரணமானார் என்பதும் தமக்கு தெரியாது என்று சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்

இருப்பினும் பிரபாரனின் 12 வயது இளைய மகன் பாலச்சந்திரனை இலங்கைப்படையினர் பிடித்து பின்னர் கொலை செய்தமைக்கான வலுவான சந்தேகங்கள் இன்னும் இருக்கின்றன.

இந்தக்கொலைகள் காரணமாக இலங்கையின் படையினருக்கு பாரிய வடுக்கள் ஏற்பட்டுள்ளன

சுரணடைந்தவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யாமல் ஏன் அவர்களை படையினர் கொலை செய்தனர் என்பது இன்னும் புரியாமலேயே உள்ளது என்றும் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்

Leave a comment