அரசியலமைப்பு உருவாக்க சபையானது 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக கூடி, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான பணிகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் 22ஆம், 23ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் கூடி முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ள சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஒன்றிணைந்த எதிரணியும், தமது யோசனைகளை அடுத்தவாரம் வழிநடத்தல் குழுவுக்கு சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளன.
இதையடுத்து, அரசமைப்பு குறித்த சட்ட வரைவை நிறைவுசெய்து நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றி, மக்கள் கருத்துக்கணிப்பினூடாக அதை அங்கீகரிக்க எதிர்பார்ப்பதாக மனோ கணேசன் தெரிவித்தார்.