அமைச்சர் டெனீஸ்­வரன் குறித்து ரெலோவின் இறுதி முடிவு இன்று

268 0

வட­மா­காண போக்­கு­வ­ரத்து, மீன்­பிடி, கிராம, வீதி அபி­வி­ருத்தி அமைச்சர் பா.டெனீஸ்­வரனை கட்­சியின் அங்கத்துவத்தில் தொடர்ந்து நீடிப்­பதா? இல்­லை­யா? என்­பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­யான ரெலோ இன்­றைய தினம் தீர்க்­க­மான முடி­வொன்றை எட்­ட­வுள்­ள­தாக அறி­வித்­துள்­ளது.

வட­மா­காண அமைச்­சர்கள் மீது எழுந்த குற்­றச்­சாட்­டுக்­க­ளை­ய­டுத்து முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனால் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த விசா­ர­ணைக்­குழு கைய­ளித்த அறிக்­கையின் பிர­காரம் அமைச்­சர்­க­ளான ஐங்­க­ர­நேசன், குரு­கு­ல­ராஜா ஆகியோர் பதிவி வில­கி­யி­ருந்­தனர்.

இந்­நி­லையில் ஏனைய அமைச்­சர்­க­ளான ப.சத்­தி­ய­லிங்கம், பா.டெனிஸ்­வரன் ஆகி­யோ­ரையும் விசா­ரணை நிறை­வ­டையும் வரையில் பத­வி­யி­லி­ருந்து ஒதுங்­கி­யி­ருக்­கு­மாறும் விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்கு­மாறும் வட ­மா­கா­ண­ மு­த­லை­மச்சர் கோரி­யி­ருந்தார்.

அதன் பின்னர் வட­மா­காண முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பி­க­கை­யில்­லாப்­ பி­ரே­ரணை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் உறுப்­பி­னர்­களால் கொண்டு வரப்­பட்­ட­போது பங்­கா­ளிக்­கட்­சியின் உறுப்­பி­ன­ரான அமைச்சர் டெனிஸ்­வரன் அதில் தமது கட்­சி­யான ரெலோ­விற்கு முன்­ன­றி­வித்­தலைச் செய்­யாது கையொப்­ப­மிட்­டி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து ரெலோவின் தலை­மைக்­குழு அமைச்­ச­ரி­டத்தில் விளக்கம் கோரி­யி­ருந்­த­தோடு அமைச்­சுப்­ப­த­வி­யி­லி­ருந்து வில­கு­மாறும் வலி­யுத்­தி­வந்­தது.

இந்­நி­லை­யில அவ்­வி­யக்­கத்தின் கடந்த தலை­மைக்­குழு கூட்­டத்தில் டெனிஸ்­வரன் கட்­சியின் தலை­மைக்­கு­ழுவின் முடி­வுக்கு சாத்­தி­ய­மான சமிக்­ஞை­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தாக தெரி­விக்­கப்­பட்டு கடந்த திங்­க­ளன்று பதவி வில­குவார் என்றும் அறி­விக்­கப்­பட்­டிந்­தது.

இருந்­த­போதும் அமைச்சர் டெனிஸ்­வரன் தான் சுயா­தீ­ன­மாக அமைச்­சுப்­ப­த­வி­யி­லி­ருந்து வில­கப்­போ­வ­தில்லை என்ற முடிவை திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­தி­ருந்தார். இவ்­வா­றான நிலை­யி­லேயே ரெலோ இன்­றை­ய­தினம் டெனிஸ்­வரனின் செயற்­பா­டுகள், கருத்­துக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக கூடுகின்றது.

இதே­வேளை அமைச்சர் டெனிஸ்­வரன் பதவி விலக கூடாது என  தனியார் போக்­கு­வ­ரத்து துறை­யினர், பொது­மக்கள், சிவில் அமைப்­புக்கள் வலி­யு­றுத்தி வரு­வ­தோடு எதிர்க்­கட்­சித்­த­லை­வரும், கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான சம்­பந்தன். இது தொடர்­பான   சம­ர­ச­மான முடி­வு­களைப் பெறும்­வ­கையில் தீர்­வொன்றை வழங்க வேண்டும் என்றும் கோரி­யுள்­ளனர்.

அதே­நேரம் தான் அநீதி இழைக்­க­வில்லை.மக்­க­ளுக்­கா­கவே செயற்­பட்டேன். வெறுமனே விருப்பு வெறுப்புக்களுக்கான நாம் பதில்களை வழங்கிக்கொண்ருக்க முடியாது  என தெரிவித்த அமைச்சர் டெனிஸ்வரன் மக்களே முடிவுகளை எடுப்பார்க எனவும் தான் அமைச்சுப் பதவியிலிருந்து விலகவில்லையென்பதையும் வடமாகாண ஆளுநருக்கு அறிவித்துள்ளார். இவ்வாறான பின்னணியிலேயே இன்றைய கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment