இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையேயான எல்லை பிரச்சினை உச்ச கட்டத்தை அடைந்து வரும் நிலையில் உலகிலேயே சிறந்த தரத்தை கொண்டுள்ள ஏவுகணைகளை இந்தியாவிடம் இருந்து வியட்நாம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமிற்கு விற்பனை செய்யப்பட்ட இந்த ஏவுகணை கப்பல்களில் இருந்து ஏவக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், விற்பனை தொடர்பான மேலதிக விபரங்கள் இந்தியாவினால் வெளியிடப்படவில்லை.
இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள வியட்நாமின் வெளிவிவகாரத்துறை அமைச்சின் பேச்சாளர்,
வியட்நாமின் கொள்கைக்கு அமைய நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காகவே இந்த ஏவுகணை கொள்வனவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இது தவிர, இந்தியாவும் வியட்நாமும் பாதுகாப்பு விடயத்தில் பங்காளர்களாக செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.